Wednesday 21 December 2011

ஓம் சனீச்வரனே போற்றி!

சனிபகவானுக்கு உரிய முக்கிய குறிப்புகள்:


எண் : 8,
வஸ்திரம் - கருப்பு நிற வஸ்திரம்,
தானியம் - எள்,
ரத்தினம் - நீலக்கல்,
திசை- மேற்கு,
சமித்து - வன்னி,
மலர் - கருங்குவளை,
உலோகம் - இரும்பு,
வாகனம் - காகம்,
அதிருவதை - எமன்,
நோய் - வாதம்,
சுவை - கசப்பு,
நைவேத்தியம் - எள்சாதம்.

சனிபகவானுக்கு உரிய சில சிறப்பு பெயர்கள்:

காரி, கரியன், மந்தன்

சனிபகவான் நமது உடலில் ஆதிக்கம் செலுத்தும் பகுதி

நரம்பு, சதை, தொடை, கால், பாதம்

சனிபகவானின் நட்சத்திரங்கள்

பூசம், அனுசம், உத்திரட்டாதி

சனிபகவானுக்குரிய எளிய பரிகாரம்:

1. தினமும் காலை வேளைகளில் காகத்திற்கு சாதம் வைத்து வருவதும், சனிக்கிழமைகளில் எள் கலந்த சாதமும் வைப்பது நல்லது.

2. வயதானவர்களுக்கு பணிவிடை செய்வதும், ஏழை எளியவர்களுக்கு தங்களால் முயன்ற தான தருமங்கள் செய்வது நல்லது.

3. உடல் ஊனமுற்றவர்களுக்கு தேவையான உதவிகளும், தான தருமங்களும் செய்வது நல்லது.

சனிபகவானின் அருளைப்பெற உதவும் கோயில் சார்ந்த பரிகாரங்கள்:

1. சனிக்கிழமை தவறாமல் நவக்கிரகத்தை ஒன்பது முறை சுற்றி வருவது.

2. திங்கள் கிழமைகளில் சிவன் கோயிலுக்குச் சென்று வழிபடுவது.

3. தினமும் விநாயகரை வழிபடுவதும், சங்கடஹர சதூர்த்தி தினம் வழிபடுவதும்.

4. சனி பிரதோச காலத்தில் சிவன் கோவிலுக்குச் சென்று வழிபடுவது.

5. ஆஞ்சநேயரை நம்பிக்கையுடன் வழிபடுவது.

சனிபகவானின் அருளைப் பெற உதவும் முக்கிய வழிபாட்டு ஸ்தலங்கள்:

சனி பகவானின் பரிபூரணமான அருளை வேண்டி பிரார்த்தனை செய்திட பல திருத்தலங்கள் இருந்தாலும் இங்கு ஒரு சில முக்கிய வழிபாட்டு ஸ்தலங்களை குறிப்பிடுகின்றோம்.

1. காரைக்காலுக்கு அருகிலுள்ள திருநல்லாறு ஸ்தலம்.

2. நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் செல்லும் வழியில் உள்ள தத்தகிரி மலையில் எழுந்தருளியிருக்கின்ற சனிபகவான்.

3. தேனி மாவட்டம், குச்சனூரில் உள்ள சுயம்பு சனிபகவான் ஸ்தலம்.

4. விழுப்புரம் மாவட்டம், மாம்பழப்பட்டு என்ற ஊரில் எழுந்தருளியிருக்கும் 21 அடி உயரம் கொண்ட யோக சனீஸ்வரன் ஸ்தலம்

5. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி எட்டியத்தளி கிராமத்தில் அமைந்துள்ள சிவன் ஸ்தலத்தில் உள்ள நவகிரக சனிபகவான்.

6. ஈரோடு மாவட்டம், கோபி செட்டி பாளையம், நம்பியூருக்கு அருகில் உள்ள குருமந்தூர் பூங்குழலி அம்மன் ஸ்தலத்திற்கு எதிரில் உள்ள சனீஸ்வரன் கோயில்.

சனிபகவானை வேண்டி கீழ்கண்ட மந்திரங்களையும், பாடல்களையும் உச்சரித்து பலன் அடையுங்கள். பெண்கள் சனி பகவானுக்கு உரிய கீழ்கண்ட கோலத்தை வரைந்து தீபம் ஏற்றி துதிப்பாடலை துதித்து வழிப்படுவது நல்லது.

சனி காயத்ரி :

காகத்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்தோ மந்த ! ப்ரசோதயாத்

சனி ஸ்லோகம்

நீலாஞ்சன ஸமாபாஸம்
ரவி புத்ரம் யமாக்ரஜம்
ச்சாயா மார்த்தாண்டம் ஸம்பூதம்
தம் நமாமி சனைஸ்சரம்

சனி பகவானின் துதிப்பாடல்:

சங்கடம் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சனீஸ்வர தேவே
இச்சகம் வாழ இன்னருள் தா! தா!

சனி பகவான் அஷ்டோத்தரம் 
(ஓம் என்ற நாமத்தில் தொடங்கி போற்றி என்ற நாமத்தில் முடிக்க வேண்டும்)

ஓம் அருளுங்கால் இனியவனே போற்றி
ஓம் அண்டியோர்காவலனே போற்றி
ஓம் அலிக்கிரகமே போற்றி
ஓம் அடர்த்தியிலா கிரகமே போற்றி
ஓம் அனுஷத்திபதியே போற்றி
ஓம் அன்னதானப் பிரியனே போற்றி
ஓம் அசுப கிரகமே போற்றி
ஓம் ஆட்டுவிப்பவனே போற்றி
ஓம் ஆயுட்காரகனே போற்றி
ஓம் ஆதியூரில் அருள்பவனே போற்றி
ஓம் ஆணவமழிப்பவனே போற்றி
ஓம் இருவாகனனே போற்றி
ஓம் இளைத்த தேகனே போற்றி
ஓம் இரும்புத் தேரனே போற்றி
ஓம் இரும்பு உலோகனே போற்றி
ஓம் ஈடிலானே போற்றி
ஓம் ஈசுவரனானவனே போற்றி
ஓம் உக்கிரனே போற்றி
ஓம் உத்திரட்டாதி நாதனே போற்றி
 ஓம் உபகிரகமுளானே போற்றி
ஓம் எமன் அதிதேவதையனே போற்றி
 ஓம் எள் விரும்பியே போற்றி
 ஓம் எவர்க்கும் அஞ்சானே போற்றி
ஓம் எண்பரித் தேரனே போற்றி
ஓம் ஏழாம் கிரகனே போற்றி
ஓம் கருமெய்யனே போற்றி
ஓம் கலிபுருஷனே போற்றி
ஓம் கழுகு வாகனனே போற்றி
ஓம் கருங்குவளை மலரனே போற்றி
ஓம் கரிய ஆடையனே போற்றி
ஓம் கருஞ்சந்தனப் பிரியனே போற்றி
ஓம் கருங்கொடியனே போற்றி
ஓம் கருநிறக் குடையனே போற்றி
ஓம் கண்ணொன்றிலனே போற்றி
ஓம் காகமேறியவனே போற்றி
ஓம் காசியில் பூசித்தவனே போற்றி
ஓம் காரியே போற்றி
ஓம் காற்றுக் கிரகமே போற்றி
 ஓம் குளிர்க் கோளே போற்றி
ஓம் கும்பராசி அதிபதியே போற்றி
ஓம் குச்சனூர்த் தேவனே போற்றி
ஓம் குளிகன் தந்தையே போற்றி
ஓம் குறுவடிவனே போற்றி
ஓம் கொள்ளிக்காட்டில் அருள்பவனே போற்றி
ஓம் கைப்புச்சுவையனே போற்றி
ஓம் சடையனே போற்றி
ஓம் சமரிலானே போற்றி
ஓம் சனி விரத்பிரியனே போற்றி
ஓம் சனிவார நாயகனே போற்றி
ஓம் சாயை புத்ரனே போற்றி
ஓம் கூடரோன் சேயே போற்றி
ஓம் சூரனே போற்றி
ஓம் சூலாயுதனே போற்றி
ஓம் சூர்ய சத்ருவே போற்றி
ஓம் சுக்ர நண்பனே போற்றி
ஓம் சிவனடியானே போற்றி
ஓம் சிவபகதர்க்கடியானே போற்றி
ஓம் சீற்றனே போற்றி
ஓம் செயலறச் செய்பவனே போற்றி
ஓம் தமோகணனே போற்றி
ஓம் தண்டாயுதனே போற்றி
ஓம் தசரத்னுக்கருளியவனே போற்றி
 ஓம் தனிக்கோயிலுளானே போற்றி
ஓம் தீபப் பிரியனே போற்றி
ஓம் திருநள்ளாற்றுத் தேவனே போற்றி
ஓம் துலாராசியிலுச்சனே போற்றி
ஓம் துயரளித்தருள்வோனே போற்றி
ஓம் தைரியனே போற்றி
ஓம் தொலை கிரகமே போற்றி
 ஓம் நம்பிக்கிரங்கியவனே போற்றி
 ஓம் நளனைச் சோதித்தவனே போற்றி
ஓம் நீலவண்ணப் பிரியனே போற்றி
ஓம் நீண்டகாலச் சுழலோனே போற்றி
 ஓம் பத்தொன்பதாண்டாள்பவனே போற்றி
ஓம் பயங்கரனே போற்றி
ஓம் பக்கச் சுழலோனே போற்றி
ஓம் பத்ம பீடனே போற்றி
 ஓம் பத்திரை சோதரனே போற்றி
ஓம் பிணிமுகனே போற்றி
 ஓம் பிரபலனே போற்றி
ஓம் பீடிப்பவனே போற்றி
ஓம் ப்ராஜாதி ப்ரத்யுதி தேவதையனே போற்றி
ஓம் புஷ்பப்பிரியனே போற்றி
ஓம் புதன் மித்ரனே போற்றி
ஓம் பூசத் ததிபதியே போற்றி
ஓம் பேதமிலானே போற்றி
ஓம் பைய நடப்பவனே போற்றி
ஓம் போற்றப்படுபவனே போற்றி
ஓம் மகரத்தாள்பவனே போற்றி
ஓம் மாங்கல்ய காரகனே போற்றி
ஓம் மதிப்பகையே போற்றி
ஓம் மநு சோதரனே போற்றி
 ஓம் முடவனே போற்றி
ஓம் முதமுகனே போற்றி
ஓம் மும்முறை பீடிப்பவனே போற்றி
ஓம் முபத்தாண்டில் சுற்றுபவனே போற்றி
ஓம் மேல் திசையனே போற்றி
ஓம் மேற்கு நோக்கனே போற்றி
ஓம் யமுனை சோதரனே போற்றி
ஓம் யமுனுடன் பிறந்தோனே போற்றி
ஓம் வன்னி சமித்தனே போற்றி
ஓம் வலிப்பு தீர்ப்பவனே போற்றி
ஓம் வக்கரிப்பவனே போற்றி
ஓம் வளை மூன்றுளானே போற்றி
ஓம் வல்லேந்தியவனே போற்றி
 ஓம் விஸ்வப்பிரியனே போற்றி
ஓம்  'ஸ்ரம்' பீஜ மந்திரனே போற்றி
ஓம் சனீச்வரனே போற்றி