Monday 5 December 2011

ஆன்மீக போதனைகள்





1. நான்கு மணிக்கு எழுந்திருங்கள். ஜபம், தியானம் செய்யுங்கள்.

2. சாத்வீக ஆகாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். வயிறு நிறைய உணவு    எடுத்துக்கொள்ளாதீர்கள்.

3. உங்கள் வருவாயில் பத்தில் ஒரு பங்கினை அல்லது ரூபாய்க்கு பத்து பைசாக்களை தர்மம் செய்யுங்கள்.

4.ஏகாதசி தினம் உபவாசம் இருங்கள் அல்லது பால், பழங்களை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.

5. தினசரி 2 மணி நேரம் மௌனத்தையும், சாப்பிடும்பொழுது மௌனத்தையும் கடைபிடியுங்கள்.

6. இனிமையாக பேசுங்கள்.

7. தேவைகளை குறைத்துக்கொள்ளுங்கள். திருப்தியாக சந்தோசமாக வாழ்க்கையை நடத்துங்கள்.

8. செய்த தவறுகளை சிந்தித்து பாருங்கள்.

9. படுக்கையை விட்டு எழுந்தவுடனும், படுக்கைக்கு செல்லும் முன்னும் கடவுளை தியானியுங்கள்.

10. எளிமையாக வாழ்க்கையும், உயர்ந்த எண்ணமும் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கருத வேண்டும்.