கணபதி (ஆன்மீக சிந்தனையில் பாரதியார் )
பயத்தை அகற்றும் கணபதி
* மூல முதற்பொருளே! மணக்குளத்து விநாயகரே! உம் திருவடியே சரணம் என்று அடைக்கலம் கொண்டு விட்டோம். நாயினும் இழிவான நாங்கள், பல பிழைகளைச் செய்து மிகவும்
களைத்திருக்கிறோம்.
அவற்றைப் பொறுத்துக் கொள்ளும்படி உன் ஒளி பொருந்திய மலர்ப்பாதங்களை வணங்கித் துதிக்கிறோம்.
* கேட்டதை வழங்கும் கற்பகவிநாயகரே!
அருளை வாரி வழங்கும் ஆனைமுகத்தோனே!
உலகம் யாவையும் படைத்தவரே! குருவே!
சந்திரனைத் தலையில் சூடிய ஈசனின் மைந்தரே!
உம் திருவடிகளை எங்கள் சிந்தையில் என்றும் வைப்போம்.
* உம்மை வழிபடும் எங்களுக்கு எட்டுத்திக்கும்
வெற்றிக்கொடி நாட்டும் உயர்வாழ்வு வேண்டும்.
பகையே கூடாது. துயரில்லாத வாழ்க்கை வேண்டும்.
அறிவு வளர வேண்டும். வீரம் பெருக வேண்டும்.
* கருணைக்கடலே! உன்னருள் பெற்ற எங்களுக்கு அச்சம்
என்பது சிறிதும் இல்லை.
கடலே பொங்கி வந்தாலும் பயம் இனி இல்லை.
* வான்புகழ் பெற்ற மறைகளின் தலைவரே!
எதற்கும் கலங்காத நெஞ்சுரத்தையும்,
எல்லாரும் இன்புற்று வாழும் வரத்தையும் அருள வேண்டும்.
அல்லல் தீர்க்க ஓடி வா!
* கணபதியப்பனே! எனக்கு வேண்டும் வரங்களை உன்னிடம் கேட்டு பாடுவேன். அவற்றை காது கொடுத்து கேள். என் மனம் சலனப்படாமல் நிலைபெற்றிருக்க வேண்டும். என் அறிவில் இருளே தோன்றாமல் தெளிவுடையதாக இருக்க வேண்டும். நினைத்த போது உன் அருள் கிடைத்திட வேண்டும். செல்வச் செழிப்புடன் என்னை வாழச் செய்ய வேண்டும்.
* கணபதியே! களிப்போடு நான் வாழ வழிவகை செய்ய வேண்டும். இவ்வுலகில் பழியில்லாத உயர் வாழ்வு பெற அருள்புரிய வேண்டும். கடமைகளைத் தவறாது ஆற்ற கருணை செய்ய வேண்டும். ஒளியாகிய கல்விச் செல்வத்தை அள்ளி வழங்க வேண்டும்.
* மணக்குள விநாயகனே! அறம், பொருள், இன்பம்,
வீடு பேறு என்னும் முக்தி
ஆகிய நால்வகைப் பயன்களையும் எனக்கு அருள வேண்டும்.
என்னை அடக்கியாளும் சாமர்த்தியத்தை தந்து உதவ வேண்டும். என்னை அடக்கக் கற்றுக்கொண்டால்,
நால்வகைப் பயன்களும் தானே என்னை வந்தடையும்.
* கணபதியே! கருணையே உருவான தயாபரா!
பிரணவ சொரூபமாக விளங்குபவனே! தவம் செய்யும் வழிமுறைகளை நான் அறியாதவனாக இருக்கிறேன். என் அல்லல்களைத் தீர்க்கவும், என் பயத்தை நீக்கி "அஞ்சேல்' என்று சொல்லியும் ஓடி வர பிரார்த்திக்கிறேன்.
==============================