Friday 2 September 2011

ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் - பாகம் 1

உங்கள் நண்பரைப் பற்றி பேசும் போதே, அல்லது அவருடன் அலைப்பேசியில் பேசும் போதோ அவர் உருவம் உங்கள் மனத்திரையில் வந்துவிடும்.
அவர் ஏதோ நேரிலையே இருப்பது போன்று உணர்வுடன்
பேசுகின்றோம். காரணம் அவர் உருவம் உங்கள் மனத்திரையில் தோன்றியமையால்தான்.

முருகன் என்றதும் இறைவனின் உருவம் மனதில் தோன்றினால் இன்னும் ஒரு படி மனம் மேலே போய் அதில் ஒன்றுகிறது.
இருளை அகற்றுகின்ற காயத்ரியின் போருளே தெரியாமல் உச்சரிக்கலாமா, எல்லாவற்றையும் விளக்குகின்ற காயத்ரிக்கே விளக்கம் தெரியவில்லை என்றால் எப்படி?

"சொல்லற் கரியானைச் சொல்லித் திருவகிக்கீழ்ச்
 சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து 
சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின்
 உள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரும் 
ஏத்தப் பணிந்து." 

எதை செய்தாலும் அதை புரிந்து செய்ய வேண்டும், எதை செய்கிறோம் என்பதைவிட எப்படி செய்கிறோம் என்பது முக்கியம்.

மாணவன் ஒருவன் காகிதத்தில் எதையோ எழுதிக்கொண்டிருந்தான்.

என்ன செய்கிறாய் என்கிறார் தந்தை.

எழுதுகிறேன் என்றான் மகன்.

எதை எழுதுகிறாய்?

தெரியாது.

தெரியாததை எப்படி எழுத முடியும் ?
இதென்ன ஆச்சர்யம், தெரியாததை படிக்கின்றோம். தெரியாததை எப்படி எழுதுகின்றாய் என்றார்.

ஆசிரியர் எழுதச்சொன்னார் எழுதுகிறேன் - மகன்.

 எதையோ செய்கின்றோம். ஆனால் அதை புரிந்து செய்கின்றோமா என்றால் இல்லை. புரிந்து செய்ய வேண்டும், அறிந்தும் செய்ய வேண்டும்.

மந்திரத்தின் ஓசைக்கு அதிக சக்தி இருக்கின்றது. இறைவனை நினைந்துருகும் இறை நாமத்துக்கு அதிக வல்லமை இருக்கிறது.

 "சிவன் அவன் என் சிந்தையுள்
 நின்ற அதனால், அவன் அருளாலே 
அவன் தாள் வணங்கி" 

என்று சொல்லுகிற போது இறை நாமங்கள் சக்தி பெருகின்றன. வலுவடைகின்றன. வல்லமை பெருகின்றன.

காயத்ரியை எந்த தெய்வத்துக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

 நீரைப்போல பொதுவானது, சூரியனைப் போன்று பொதுவானது.

சூத்திரர் சொல்லக்கூடாது, துவிஜனர்கள் சொல்லலாம் என்கிறார்களே இது சரியா என்று ஒரு பெரியவர் கேட்டார்.

காயத்ரி மந்திரத்தை சரியாக புரிந்து அறிந்து ஜெபிப்பவர்கள் எல்லாரும் துவஜனங்கள் என்கிறோம்.

துவிஜன் என்றால் என்ன பொருள் என்றால், இருமுறை பிறப்பவன் என்று பொருள். இருமுறை பிறக்க முடியுமா? தாயின் வயிற்றிலிருந்து பிறப்பது ஒரு பிறவி.

நான் யார் , இங்கு எனக்கு என்ன வேலை என்று தத்துவ விசாரணையில் இறங்கி வாழ்க்கையை திருத்தியமைக்க ஆன்மீகத்துள் இறங்குவது இரண்டாவது பிறப்பு. அவனைத்தான் துவிஜனன் என்கிறோம்.


அந்த வாழ்க்கைக்கு துணைபுரிவது காயத்ரி மந்திரம்.
அதனுள் செய்வதை தெரிந்து செய்வோம், திருத்தி செய்வோம்.                                                              

                                                                                                                   ( தொடரும்...)