Friday, 29 July 2011

முருகப்பெருமான் (ஆன்மீக சிந்தனையில் பாரதியார் )

வடிவேலும் மயிலும் துணை        
                        

* மயில் மீது 
வடிவேலுடன் வரும் 
முருகப்பெருமானே
உன் பக்தர்கள் மனம் குளிரும் 
வகையில் 
பொன்னும், பொருளும்
புகழ் மிக்க வாழ்வும்
திறமையும் தந்தருள்
அசுரர்களிடமிருந்து தேவர்களைக் காத்தவனே
முடிவு என்பதே இல்லாத 
வேத வடிவமே!
எங்கள் கவலைகளைப் போக்கி ஆனந்த வாழ்வு கொடு.

* தேவலோகம் வாழ்வு பெற வந்த சிவகுமரா
உன் பாதங்களில் சரணடைகிறோம்


எங்கள் 
நோய்களைப்போக்கிடும் 
வண்ணம் ஒளி பொருந்திய 
சுடர் வேலினைத் தாங்கி வா
அறிவென்னும் கோயிலிலே
நாங்கள் புதுவாழ்வு பெற 
எங்கள் இல்லம் வந்து 
அருள் செய்.அமரர்கள் வாழ்வு பெற வந்த வேலவா 
உன் திருவடிகளே சரணம் சரணம்
உள்ள உடல் பிணியாவும் சிதறி ஓடும்படியாக
ஒளிபொருந்திய வேலாயுதத்தை ஏந்தி நிற்கும் 
முருகப்பெருமானையே சரணடைகிறேன்* பரமசிவனின் பாலகனே
எங்கள் மனதில் கொலுவிருக்கும் குகனே
வாழ்வில் வளம் பெற தொழிலில் மேன்மையைத் தந்தருள்
தேவர்கள் வாழ்வு பெற சூரனுடன் போர் புரிந்த 
முருகப்பெருமானே
உன் திருவடிகளைச் சரணடைகிறோம்.

* வில்லினை ஒத்திருக்கும் 
உன் புருவத்தை வளைத்ததால் 
மகேந்திரகிரி என்னும் மலையே நொறுங்கிப் போனது
வீரம் மிக்க அந்தப் பார்வையால் எங்களைக் காத்திடு
வேலும் மயிலும் எந்த நேரத்திலும் துணைநிற்க 
அருள்செய்.

* தூய பெருங்கனலாகிய நெற்றிக்கண்ணிலிருந்து அவதரித்த
சுப்பிரமணியக்கடவுளை 
ஒழுக்கத்துடன் 
பணிந்து போற்றினால் 
நம்மை ஒருபோதும் துன்பம் நெருங்குவதில்லை.


* வடிவேல் முருகப்பெருமானின் 
திருவடிகளைப் பணிந்து போற்றுவோம்
சுற்றி நில்லாது ஓடிவிடு பகையே
வேலாயுதம் துள்ளிக் கொண்டு வருகிறது
சுருதிகளின் பொருளாக திகழ்பவனே
கவலைகளைக் கடல்கடத்தும் ஞானபண்டிதனே
உன் அடியார்களை காத்தருள்வாய்.

* முருகப்பெருமானை நினைப் பவர்களுக்கு 
நல்லறிவைப் பயன்படுத்தி அறவழியில் 
சேர்த்த செல்வம் சேரும்
அவரது வலிமையால் தீமைகள் விலகிச் செல்லும்
அவரை நி னைப்பவர்களுக்கு எவ்விதக் குறையு மில்லை
மனதில் கவலை கடல் போல தோன்றும் போது
குமரப்பெருமானின் கையிலிருக்கும் 
வேல் பாதுகாக்கும்.

அமரர்கள் வாழ்வு பெற வந்த வேலவா 
உன் திருவடிகளே சரணம் சரணம்
உள்ள உடல் பிணியாவும் சிதறி ஓடும்படியாக
ஒளிபொருந்திய வேலாயுதத்தை ஏந்தி நிற்கும் 
முருகப்பெருமானையே சரணடைகிறேன்


பச்சை திருமயிலில் வரும் வீரன் அவன்
கண்களுக்கு அணி செய்யும் அலங்காரன்
இளமையும் அழகும் நிறைந்த குமாரன்
ஒளி பொருந்திய பன்னிரு தோள்களை கொண்ட வேலன்
வண்ணத்தமிழால் பாடும் அன்பர்களுக்கு எளிய சிங்காரன்
அவன் திருவடிகளைப் பணிந்திடு மனமே
அவன் உள்ளம் கனிந்து அருள்புரிவான்
தேவேந்திரன் மகளான தெய்வானையை மணந்தான்
தெற்குத் தீவினில் சூரபத்மனை வதைத்தான்
தமிழ் மக்களுக்கு அவனே தலைவன் ஆனான்
என்றும் பாக்கள் பாடும் பாவலர்களுக்கு 
இன்னருள் செய்பவன் முருகனே
இந்த பாரினில் அறத்தை நிலைநாட்டி அதர்மத்தை அடியோடு அழிப்பவனும் அவனே
முருகா! நீ உறையும் குன்றான சுவாமிமலையில் 
வந்து நின்று உனக்கு சேவகம் செய்வோம்
உனக்கு செய்யும் சேவை கண்டு மகிழ்ந்து
உன் அன்னை பராசக்தி 
இன்னருளை வாரி வரங்களைத் தருவாள்
மயில் மீதினில் வடிவேலினைத் தாங்கி வருவாய் முருகா
நலமும், புகழும், தவமும், தனமும் 
என எல்லாவையுமே தந்து அருள்புரிவாய்
வேதசுருதிகள் உன் புகழையே பாடுகின்றன
அமரலோகம் வாழ்வு பெற சுடர்வேலினை விடுத்த 
உன் திருவடிகளையே சரணமாகப் பற்றுகின்றோம்
எங்கள் குருவாக விளங்கும் உன்னை வணங்கி மகிழ்கிறோம்.