Friday, 22 July 2011

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்

தீண்டாமையை தீவிர கொள்கையாகவும் 
உணவு உண்பதையே தெய்வமாக கருதும் வரை
நீங்கள் ஆன்மிகத்தில் முன்னேறமுடியாது.

பெரிய புத்தகங்களை படிப்பதாலும் 
அவ்வாறு படித்து பேரறிஞர் ஆவதாலும் 
ஆன்மிக உணர்வைப் பெற முடியாது என்பது நிச்சயம்.

சங்கங்கள் ஏற்படித்தி கூட்டங்கள் சேர்த்து எவரும் 
ஆன்மிக உணர்வை பெற முடியாது.

 ஆன்ம ஞானத்தைப் பெற விரும்பும் ஒருவன் 
தொடக்கத்தில் புற உதவிகளைப் பெற்று 
சுயபலத்தில் நிற்க வேண்டும்ஆன்ம ஞானம் கிட்டிய பின் 
பிற உதவிகள் தேவையில்லை.

கல்வி மூலம் தன்னம்பிக்கை ஏற்படுகிறது
தன்னம்பிக்கை மூலம் தன்னுள் உறங்கிக் கிடக்கும் 
ஆன்மா விழித்துக் கொள்கிறது
கைக்கோவாளுக்கோ ஆற்றல் ஏதுஆற்றல் முழுவதும் ஆன்மாவிலிருந்தே வெளிப்படுகிறது.

எல்லாப் பெருமையையும்எல்லா ஆற்றலையும்
எல்லாத் தூய்மையையும் ஆன்மா தூண்டுகிறதே தவிர
ஆன்மாவைத் தூண்டுவது எதுவும் இல்லை.

-------------------------------------------------------------------------