அனைத்து ஒலிகளும் பிறப்பதற்க்குண்டான
அடிப்படையே ஓம் எனும் ப்ரணவ மந்திரம் தான்...
ஓம் எனும் ப்ரணவ மந்திரம்...
அ , உ , ம்
இந்த மூன்று எழுத்துக்களை உள்ளடக்கியது...
அ , உ , ம் இந்த மூன்று எழுத்துக்களும் முறையே
பிரம்மா , சிவன் , விஷ்ணுவை குறிக்கும்..
ம – அழித்தல்
அ என்பது சிவனையும்
உ என்பது உமையவள்
எனப்படும் சக்தியினையும்,
சிவனும் சக்தியும்
இணைந்த
சிவசக்தியினையும் குறிக்கும்.
அகார, உகார, மகாரம்-- சூரியன் , சந்திரன் , அக்கினியையும் குறிக்கும்
அ -- சூரியன் ரிக் வேதம் ரஜோ குணம் கிரியா சக்தி
உ - சந்திரன் ய்ஜூர் வேதம் சத்வ குணம் இச்சா சக்தி
ம் - அக்கினி சாம வேதம் தமோ குணம் ஞான சக்தி
கணபதியின் முகம் ஓம் எனும் ப்ரணவ மந்திரத்தை குறிக்கும்.
கணபதியின் இருகண்கள் ஓ வின் இரு சுழிகளையும்
தும்பிக்கை - ஓவின் இரண்டாம் சுழியிலிருந்து
மூன்றாம் சுழிக்கு வந்து ம் வரை குறிக்கும் ....
அதனால் தான்
இரு கண்களுக்கு நடுவில்+மூக்கின் ஆரம்பம் ஆக உள்ள இடத்தில்
நம் கவனத்தை செலுத்தி அதன் உள்ளே இருக்கும் நமது ஆத்மாவிற்கு
ஓம் எனும் மந்திரம் சொல்லி தியானம் செய்வதன் மூலம்
அந்த ஆதமாவை பலம் பெற செய்யலாம்
நாம் எந்த செயல் செய்தாலும் பிள்ளையார் சுழிப்போட்டு தான் தொடங்குவோம்.. பிள்ளையார் சுழி என்பதே..ஓம் -ஐ குறிக்கும்..
ஓம் தான் மருவி மருவி...உ வடிவில் போட்டுக்கொண்டிருக்கிறோம்...
ஓலியின் ஆதி ஓம் ...ஓம் வடிவில் முகம் உள்ள விநாயகரை
முதன்மை கடவுளாக வணங்கி விட்டு அடுத்து
ஓம் எனும் ப்ரணவ மந்திரத்தின் மகிமையை விளக்கிய
ஓம் முருகரையும் வணங்கிவிட்டு கடவுள்களை வணங்க வேண்டும்...
ஓம் எனும் ப்ரணவ மந்திரத்தின் பொருள் தெரியாததால்
பிரம்மனை சிறையில் அடைத்து..விளக்கம் கேட்ட
சிவபெருமானுக்கு குருவாக அமர்ந்து
முருகர் பொருளை விளக்கினார்..
இதிலிருந்து நாம் இன்னொரு
பாடத்தையும் தெரிந்து கொள்ளலாம்
நமக்கு தெரியாததையும், நல்ல விசயத்தையும் யார் சொன்னாலும்
அவர்களை குருவாக ஏற்று கற்று தெரிந்துக்கொள்ள வேண்டும்..
தொடர்ந்து ஓம் எனும் மந்திரம் சொல்லியபடி தியானம் செய்தால்
உடலில் காந்த ச்க்தி அதிகரிக்கும் - மனசாந்தி ஏற்படும்.
ஓம் எனும் மந்திரத்தில் ஐந்து பூதங்களும் அடங்கும்...
அசரம்(இயங்குதிணை), சரம் (நிலைத்திணை),
அசரம்+சரம்= சராசரம்(உலகம்) தோன்றியது.
கீதாசிரியனாகிய கண்ணன் ஓம் என்ற சொல்லே மனிதனின் கடைசி மூச்சாக இருக்கவேண்டும் என்கிறான. பகவத் கீதை (8.13)
மயில் - அழகான விசித்திர வடிவமுடைய, பல வர்ணமுள்ள, மறதி முதலிய குணங்களுக்குக் காரணமானதும், விசித்திர மாயைக்கு இருப்பிடமானதுமான மூலப்பிரகிருதி, மாயை............. விந்துசேவல் – கோழி – மாச்சரியம்............................... விந்து நாதம்
ஓம் எனும் ப்ரணவத்திலிருந்து தான் விந்து , விந்துவிலிருந்து நாதமும் அதிலிருந்து உலகமும் உயிர்களும் ஒன்றிலிருந்து ஒன்றாகத் தோன்றின எனத் தத்துவ நூல்கள் கூறுகின்றன.
ஆக இரண்டுமே மாயை. மாயைக்குத்தான் ஓம் காணக்கிடைக்கும்....
மாயை + சராசரம்(உலகம்)= மாய உலகம்